தென்காசியில் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது

தென்காசியில் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது
X
மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமையில் செங்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கந்தசாமி பாண்டியன், மாவட்ட கழக அவைத்தலைவர் விபி மூர்த்தி, துணை செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், பொருளாளர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் செ கிருஷ்ணமுரளி; பொதுச் செயலாளர் தெரிவித்த கருத்துக்களை நிர்வாகிகளிடம் தெரிவித்தார் பின்னர் அவர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பூத் கமிட்டி பணிகளை ஒன்றிய, நகர, பேரூர் கழகம் வாரியாக தனித்தனியாக ஆய்வு செய்து விரைந்து முடித்து கொடுக்குமாறு ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் கழக பொதுச் செயலாளர் இலக்கு அந்த இலக்கினை அவர் எட்ட நம்முடைய மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். பூத் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் எல் ஐ சி முருகையா, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கிருஷ்ணன் என்ற கிட்டுராஜா, சத்யா, சந்திரன் மற்றும் மாவட்ட ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story