முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா. பள்ளி குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தனர்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா. பள்ளி குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தனர்.
X
பரமத்தி வேலூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தனர்.
பரமத்தி வேலூர்,ஜூன்.3:   பரமத்தி வேலூர் திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட அமைப்பாளர் பாலாஜி,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு சங்கர கந்தசாமி கண்டர் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் பேரூர் கழகச் செயலாளர் முருகன், மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன்,பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் கே.கே.சண்முகம், வக்கீல் பாலகிருஷ்ணன், கண்ணன்,பொத்தனூர் பேரூர் கழகச் செயலாளர் கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூர் கழக செயலாளர் பெருமாள், மதியழகன், நாமக்கல் மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதி,வேலூர் செயலாளர் ராணி மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்கள்,பேரூர்,நகரம், ஒன்றியம்,கிளை கழகப் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story