கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா உணவகத்தில் நாள் முழுவதும் உணவு வழங்கிய நாமக்கல் தெற்கு நகர திமுகவினர்!

X
Namakkal King 24x7 |3 Jun 2025 7:57 PM ISTநாமக்கல் பூங்கா சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நாள் முழுவதும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் எம்.பி அவர்கள் ஆலோசனைப்படி நாமக்கல் தெற்கு நகரம் லத்துவாடியில் அமைந்துள்ள நம்பிக்கை இல்லத்தில் மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. மேலும் நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நாள் முழுவதும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், மேற்கு நகர செயலாளர் சிவக்குமார், மோகனூர் ஒன்றிய செயலாளர் நவலடி,மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கடல் அரசன் கார்த்தி,26 வது வார்டு செயலாளர் பாஸ்கர் இளஞர் அணி பவித்ரன், மன்னன், ராஜேஸ் லத்துவாடி பகுதி நிர்வாகிகள் மகேஷ், செல்வம்,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story
