உதகை நகரில் இருந்து மஞ்சூர் பகுதிக்கு இடம்பெயர்ந்த இளம் வயதுடைய ஒற்றை காட்டு யானையை கெத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும்பணியில் வனத்துறையினர்
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பர்லியார் வனப்பகுதியில் இருந்து கடந்த மே மாதம் வெளியேறிய இளம் வயதுடைய ஒற்றை காட்டு யானை வழித்தவறி உதகை நகரில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், மற்றும் யானை விரட்டும் குழுவினர் உதவியுடன் கடந்த 28 நாட்களுக்கும் மேலாக காட்டு யானை அதிநவீன ட்ரோன் கேமராக்களை கொண்டு கண்காணித்தும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் உதகையிலிருந்து இடம்பெயர்ந்து எமரால்டு வழியாக குந்தா பகுதிக்கு உலா வந்ததால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் காட்டு யானையை கண்காணித்தும் மஞ்சூரிலிருந்து யானைகளின் புகலிடமாக திகழும் கெத்தை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மஞ்சூர் பகுதியில் உலா வந்த காட்டு யானை கண்டு காட்டெருமை கூட்டம் அலறி அடித்து ஓட்டம் பிடித்தன.
Next Story



