டூவீலர்கள் மீது கார் மோதி, மூவர் படுகாயம்

X
Komarapalayam King 24x7 |3 Jun 2025 9:19 PM ISTகுமாரபாளையம் அருகே டூவீலர்கள் மீது கார் மோதி, மூவர் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையம் பழைய தபால் நிலையம் அருகே வசிப்பவர் கலைச்செல்வன், 28. எலக்ட்ரிசியன். இவர் நேற்றுமுன்தினம் காலை 10:45 மணியளவில், தனது பேஷன் புரோ டூவீலரில், பி.வி.சி. பைப் கட்டிக்கொண்டு, சேலம் கோவை புறவழிச்சாலையில், டீச்சர்ஸ் காலனி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு பின்னால் வந்த, ஸ்விப்ட் டிசைர் கார் ஓட்டுனர், இவரது டூவீலர் மீது மோத, இவரது டூவீலர், முன்னால் சென்று கொண்டிருந்த , ஸ்ப்ளண்டர் பிளஸ் டூவீலர் மீது மோதியது. இதில் வாகனத்தை ஓட்டிய பூபதி, 46, தினேஷ்குமார், 18, ஆகிய எலக்ட்ரிசியன்கள் மற்றும் கலைச்செல்வன் ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். மூவரும் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து கலைச்செல்வன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுனர், விருதாச்சலத்தை சேர்ந்த ராகுல்சர்மா, 25, என்பவரை கைது செய்தனர்.
Next Story
