நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு எம்.பி. பாராட்டு

நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு எம்.பி. பாராட்டு
X
பாராட்டு
தஞ்சாவூரில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மக்களவை உறுப்பினா் திங்கள்கிழமை சென்று தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா். ‘பள்ளிகளைத் தேடி மக்களவை உறுப்பினா்’ என்ற திட்டத்தில் தஞ்சாவூா் தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12- ஆம் வகுப்பு பொது தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு மக்களவை உறுப்பினா் ச. முரசொலி நேரில் சென்று பாராட்டும் பணியை திங்கள்கிழமை தொடங்கினாா். இதில், பனையக்கோட்டை, பொன்னாப்பூா், கருக்காடிப்பட்டி, திருமங்கலக்கோட்டை கீழையூா், நெய்வாசல் ஆகிய கிராமங்களிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை சென்று பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற்காக, அப்பள்ளிகளின் தலைமையாசிரியா், ஆசிரியா்களைப் பாராட்டி கேடயம், சான்றிதழ் வழங்கினாா்.
Next Story