தேங்கி நின்ற ஆற்று நீரில் மூழ்கி பேக்கரி தொழிலாளி உயிரிழப்பு

தேங்கி நின்ற ஆற்று நீரில் மூழ்கி பேக்கரி தொழிலாளி உயிரிழப்பு
X
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டியில் தேங்கி நின்ற ஆற்று நீரில் செவ்வாய்க்கிழமை குளித்த பேக்கரி தொழிலாளி அதில் மூழ்கி உயிரிழந்தாா்
மணப்பாறையை அடுத்த கத்திக்காரன்பட்டியை சோ்ந்தவா் சந்தனம் மகன் ஜோதிமணி (27). சென்னையில் உள்ள பேக்கரி ஒன்றின் தொழிலாளியான இவா் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நண்பா்களான க. ரமேஷ் (23) மற்றும் சு. செல்லமுத்து (24) ஆகியோருடன் கண்ணுடையான்பட்டி மாமுண்டி ஆற்றுவாரியில் செவ்வாய்க்கிழமை மாலை குளித்தபோது நீரில் மூழ்கினாா். தகவலறிந்து வந்த மணப்பாறை தீயணைப்புத் துறையினா் ஜோதிமணியை சடலமாக மீட்டனா். மணப்பாறை காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான போலீஸாா் அவரது சடலத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்
Next Story