அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
சோழவந்தான் தொகுதி, அலங்காநல்லூர் ஒன்றிய கழகம் சார்பில் கிளைக் கழகங்களில் பூத்கமிட்டி அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் பெரியஇழந்தகுளம்,கோவிலூர்,கீழக்கரை,அய்யூர், கீழசின்னம் பட்டி,எர்ம்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, தெத்தூர்,T.மேட்டுப் பட்டி ஆகிய பகுதிகளில் ஒன்பது பேர் கொண்ட பூத் குழு அமைக்கும் பணி நேற்று (ஜூன்.3) நடைபெற்றது. இக்கூட்டம் திருமங்கலம் சட்ட மன்ற உறுப்பினர் உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்,அதிமுக முக்கிய நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் , அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story



