மைலம்பட்டி: பள்ளி மாணவன் மீது கத்தியை வீசியதால் பரபரப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மைலம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனி மகன் லட்சுமணன் (15). இவர் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அவரது நிலத்தில் பக்கத்து வீட்டுகாரரான மூர்த்தி (25) என்பவரது கோழிகள் மாணவனின் நிலத்திற்கு வத்ததால் கோழிகளை மாணவன் விரட்டியுள்ளான். கோழிகளை விரட்டியதால் மூர்த்தி ஆத்திரமடைந்து கத்தியை எடுத்து மாணவன் மீது வீசியதாக கூறப்படுகிறது. வீசப்பட்ட கத்தியை எடுத்துக்கொண்டு. தந்தை பழனியுடன் போச்சம்பள்ளி போலீசில் லட்சுமணன் மீது புகார் கொடுத்தான் அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

