சாலை விபத்தில் டூவீலரில் சென்ற நபர் பலி

X
மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த ராஜசேகர் ( 34) என்பவர் நேற்று மாலை திருமங்கலத்தில் இருந்து எல்லீஸ் நகருக்கு அவரது விலை உயர்ந்த பைக்கில் சென்று கொண்டிருந்தார். கப்பலூர் நான்கு வழிச்சாலையில் சாலை பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஒருவழி பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வரும் நிலையில் அந்த வழியாக சென்ற ராஜசேகருக்கு பின்னால் வந்த கர்நாடக எண் கொண்ட லாரி மோதியதில் தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்து லாரியின் சக்கரங்கள் ராஜசேகர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருமங்கலம் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
Next Story

