அன்னதானப்பட்டி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்த குட ஊர்வலம்

X
சேலம் அன்னதானப்பட்டியில் பிரசித்திபெற்ற மாரியம்மன், விநாயகர் மற்றும் திரவுபதி அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி கோவில்களில் தினமும் சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பக்தர்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் மேளதாளம் முழங்க முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
Next Story

