கோவை: மூதாட்டி பாலியல் வன்கொடுமை– குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கோவை: மூதாட்டி பாலியல் வன்கொடுமை– குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
X
65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.
கோவையில் 65 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட வேலுச்சாமி (42) என்பவருக்கு, கோவை சிறப்பு நீதிமன்றம் நேற்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு, கோவையில் உள்ள பேரூர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. அப்போது, மாடு மேய்த்துக் கொண்டு இருந்த மூதாட்டியை தனது வீடு அருகே அழைத்துச் சென்ற வேலுச்சாமி, அங்கே அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வேலுச்சாமி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், குற்றம் நிரூபிக்கப்பட்ட வேலுச்சாமிக்கு நீதிபதி ஒரு ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.
Next Story