திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வருபவர் அப்பன் ராஜ், ராஜேஸ்வரி, இவர்கள் சென்னை மணலி, பகுதி உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் பூட்டிருந்த வீட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரொக்க பணம் பன்னிரண்டாயிரத்தை திருடிக் கொண்டு பின்புறம் உள்ள கதவை திறந்து அதன் வழியாக வெளியே தப்பித்துச் சென்றுள்ளனர், இந்நிலையில்‌ வீட்டின் பின்புறம் குடியிருப்பவர்கள் வெகு நேரமாகியும் பின்புறம் கதவு திறந்த நிலையில் உள்ளதை கண்டு அவர்களது உறவினருக்கு தொலைபேசி மூலமாக தகவலை தெரிவித்துள்ளனர், இந்நிலையில் வீட்டைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், இது சம்பந்தமாக வீட்டின் உரிமையாளரான அப்பன்ராஜிக்கு உறவினர்கள் தகவலை தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு விரைந்து , வந்து அப்புன்ராஜ், வீட்டிற்குள்ளே சென்று பார்த்த போது துணிமணிகள் கலைந்து உள்ள நிலையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரொக்க பணம் 12 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அருகிலுள்ள புல்லரம்பாக்கம் B8 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், ‌ வழக்கு பதிவு செய்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பல்வேறு கோணத்தில் தேடி வருகின்றனர்.
Next Story