கலைஞர் பிறந்த நாள் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

அத்திப்பட்டு ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
அத்திப்பட்டு ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சியில் திமுக தலைவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர் இதில் ஒன்றிய கழகச் செயலாளர் உதயசூரியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதே போன்று மீஞ்சூர் பகுதியில் திமுக நகர கழகம் சார்பில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்
Next Story