கொளப்பாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு
திமுக தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கருணாநிதியின் 102 -வது பிறந்த நாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் கீழையூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொளப்பாடு ஊராட்சியில், துரை செல்வம் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கொளப்பாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு, திருக்குறள் புத்தகம் மற்றும் எழுதுப்பொருட்கள் ஆகியவற்றை திமுக கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோ.பா.மலர்வண்ணன் வழங்கினார். விழாவில், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோ.சி.குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் வீ.ஆர்.சுப்பிரமணியன், செந்தில், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஜெயந்தி மாசிலாமணி, பாஸ்கரன், கிளைச் செயலாளர் ஜெ.கணபதி, இளைஞரணி அமைப்பாளர் ஆர்.கார்த்தி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆர்.குமார், எஸ்.சக்கரவர்த்தி, பி.தேவராஜன், ஜே.அருண், ஸ்டாலின் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, திமுக கீழையூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் சார்பில், திருக்குவளை கருணாலயம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.
Next Story



