கோவில் கலப்பால் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

கோவில் கலப்பால் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
X
திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோட்டூர் அருகே திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவில் கலப்பால் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி தீமிதி திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது விழா நாட்களில் தினம் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அம்மன் வீதி உலா நடைபெற்றது முக்கிய விழாவான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.இதில் பல்வேறு கிராமங்களில் உள்ள பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர் பின்னர் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது மாலையில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story