நாகை தெற்கு பால்பண்ணைச் சேரியில் வெறி நோய் தடுப்பூசி முகாம்

நாகை தெற்கு பால்பண்ணைச் சேரியில் வெறி நோய் தடுப்பூசி முகாம்
X
54 நாய்களுக்கு தடுப்பூசி - ஆண்டுதோறும் வெறிநோய் தடுப்பூசி போட அறிவுறுத்தல்
நாகை தெற்கு பால் பண்ணைச் சேரியில், நாய்களுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தெற்கு பால்பண்ணைச்சேரி பகுதியில் ஒரு பசு மாடு வெறி நாய் கடித்து இறந்தது. அதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, நாய்களுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நாகை கால்நடை மருத்துவமனை சார்பில், 54 நாய்களுக்|கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராம்நாத் கலந்து கொண்டார். முகாமில், கால்நடை மருத்துவர் டாக்டர் பாலாஜி, முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் சங்கர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பழனிச்சாமி ஆகியோர் நாய்களுக்கு தடுப்பூசி போட்டனர். வெறி நோய் என்பது நாய் கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இந்நோய் மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்து கால்நடைகள், வளர்ப்பு பிராணிகளையும் தாக்கும். இந்நோயை தடுப்பதற்கு, ரூ.17 மானிய விலையில் அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆண்டுதோறும் தவறாமல் தங்களது செல்லப்பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பொதுமக்களை நாகை கால்நடை மருத்துவர் டாக்டர் பாலாஜி அறிவுறுத்தினார்.
Next Story