நாடக கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கிய திமுகவினர்

மதுரை தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் நாடக கலைஞர்கள் மற்றும் திமுக பேச்சாளர்களுக்கு நிதி உதவி வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருமங்கலத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கள்ளிக்குடி ஒன்றியம் மருதங்குடி கிளை திமுக செயலாளரும் கிராமிய நாடக நடிகருமான மருதமுனி அவர்களை பாராட்டி நிதி உதவி அளித்தும், மேலும் திமுக பேச்சாளர்கள் மதுரை சாதுராஜன், போடி காமராஜ் மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றியம் வலையங்குளம் கிளை திமுக முன்னாள் பிரதிநிதி கழக முன்னோடி தம்பிதுரை அவர்களுக்கும் மருத்துவ நிதி உதவி என நலத்திட்ட உதவிகளாக தலா 4 நபர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் விதம் நேற்று (ஜூன்.3) தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ முத்து ராமலிங்கம் உள்ளிட்ட மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story