ராமநாதபுரம் கோவில் திருவிழாவை முன்னிட்டு சமத்துவ எருது கட்டு விழா நடைபெற்றது

திருப்புல்லாணி ஒன்றியம் பொக்கனா ரேந்தல் கிராமத்தில் சமத்துவ எருது கட்டு விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோயில் 59ம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சுற்று வட்டாரத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு ஸ்ரீ மலைமேல் சாத்தாருடையார் அய்யனார் கோவிலில் நேர்த்திக்கடனாக பக்தர்கள் பொங்கல் வைத்து ஆண்டுதோரும் கொண்டாடப்பட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்விழா முன்னிட்டு சமத்துவ எருதுகட்டு நடைபெறுவது வழக்கமாக கொண்டாடி வருகின்றனர்.இந்த சமத்துவ எருதுகட்டு விழாவை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷாமுத்துராமலிங்கம் தொடங்கிவைத்தார். விழா ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜேந்திரன் செய்திருந்தார்.
Next Story