ராமநாதபுரம் எருது கட்டு விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம். திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் 59 ஆம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில், எருது கட்டு வீரர்களுக்கு மஞ்சள் நிறத்தில் அடையாள பனியன்கள் தனது திருக்கையால் கொடுத்து துவக்கி வைத்தார்.இதில் 30-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.முன்னதாக கோவிலில் வைத்து கோவில் மாட்டிற்கு பூஜைகள் செய்து மாடுபிடி இடத்திற்கு கொண்டு வந்தனர்.இங்கு கோவில் மாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் வேஷ்டி,துண்டு மாட்டின் தலையில் கட்டி, சந்தனம், குங்குமம் இட்டு முதல் மரியாதை செய்தார்.இதில் முன்னாள் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தலைவர் புல்லாணி,உள்ளிட்ட கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர். இதனை அடுத்து எருது கட்டு விழா சீரும் சிறப்புமாக துவங்கியது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர். தாதனேந்தல், பொக்கனாரேந்தல், காஞ்சிரங்குடி, கொட்டகுடி, பள்ள வச்சேரி, கீரமண்டி, கொண்டுள்ளாவி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தினர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் 101 கிராம தேவேந்திரகுல வேளாளர் மகாசபை தலைவர் ராஜ்குமார் எருது கட்டு விழாவை துவக்கி வைக்க வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்திற்கு ஆளுயர மலர் மாலை,சால்வைகள் அணிவித்து வரவேற்றார்.உடன் துணைத் தலைவர் கே.கோபு உள்ளார்.இதில் 30 மாடுகள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து எருதுகட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டன. எருது கட்டு விழாவிற்கான ஏற்பாட்டினை எருதுகட்டு பேரவை தலைவர் ராஜேந்திரன் ஒருங்கிணைத்தார்.
Next Story




