கிருஷ்ணகிரி:மீன் வளர்போர் விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்ட மீன் வளர்ப்பு விவசாயிகள், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்கள் மீன் பண்ணை அமைத்து மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு ஹெக்டேர் பரப்பளவு மீன் பண்ணைக்கு 10,000 எண்ணம் மீன் குஞ்சுகள் வீதம் ரூ.5000/- மானியம் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 07 ஹெக்டேருக்கு மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்திற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, 2025-26-ஆண்டிற்கு உள்ளீட்டு மானியமாக வழங்கும் திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள விவசாயிகள் 20.06.2025-க்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை, அரசு மீன் பண்ணை எதிரில் உள்ள மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை/ மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கூடுதல் விவரம் பெற்று விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04343 235745 9384824281 ஆகிய அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சதினேஷ் குமார் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
Next Story



