அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம்

அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம்
X
அரியலூர் அருகே மாவட்ட பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை மற்றும் கலந்தாய்வுக் பாஜக மாநில செயலாளர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அரியலூர், ஜூன். 5- அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமையில் ராணி அஹில்யாபாய் ஹோல்கர் 300 -வது ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்தும் கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் விளாங்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் அஸ்வந்தாமன் கலந்து கொண்டு கட்சி பணிகள் குறித்தும், மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்வது குறித்தும் சிறப்புறையாற்றி பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் பாஜகவினர் பச்சை நிற கயிறு கொண்டு கங்கணம் கட்டி முருகனைக் கும்பிட்டு பக்தி கரகோஷம் எழுப்பினர் கூட்டத்தில் மாவட்ட பெரது செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மண்டலத் தலைவர் பவன்குமார், கலியமூர்த்தி உள்ள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  அஸ்வத்தம்மன் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் யார் அந்த சார் என்பதற்கு இன்னும் விடை தெரியவில்லை இவ் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் தொடர்ந்து காவல் அதிகாரியிடமும் காவல் அதிகாரி வட்டச் செயலாளர் கோட்டூர் சண்முகத்திடமும் கோட்டூர் சண்முகம் அமைச்சர் சுப்பிரமணியனிடம் தொடர்ந்து பேசி உள்ளனர் எனவே அமைச்சர் சுப்பிரமணியன் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகம் மற்றும் காவல் அதிகாரி ஆகியோர் ஏதோ ஒரு விதத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவே இந்த வழக்கை மறு விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் இல்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டால் தான் யார் அந்த சார் என்பது தெரியவரும் என கூறினார் தமிழுக்காக செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்டுள்ளது உலகத்திலேயே ஒரு மொழிக்காக செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்டுள்ளது தமிழுக்காக தான் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலைமை தாங்கி இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை முன்னெடுப்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி அதில் ஈடுபடும் இளைஞர்களை ஊக்குவிப்பதில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு எடுத்து வருகிறது உலகத்தை செயற்கை நுண்ணறிவு ஆளப்போகிறது என்று சொன்னால் செயற்கை நுண்ணறிவை இந்தியா தேசம் ஆளும் என்ற நிலையை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கி வருகிறார் உலகத்தின் மூத்த மொழி தமிழ் என்பதில் சந்தேகம் இல்லை இதனை உலகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழக மொழி ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர் தமிழில் இருந்து தான் இந்தியாவில் உள்ள கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் பிறந்தன என்பதை மறுக்க முடியாது என கூறினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் அய்யப்பன், மாவட்ட பெரது செயலாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறிப்பிடத்தக்கது.
Next Story