மதுரை நடிகர் மாரடைப்பால் மரணம்.

மதுரை நடிகர் மாரடைப்பால் மரணம்.
X
மதுரை சேர்ந்த துணை நடிகர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம் படத்தில் மொக்கசாமி வேடம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மதுரையை சேர்ந்த நடிகரான இலைக்கடை முருகன் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜூன்.04) சிகிச்சை பலனின்றி மதியம் 3 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story