தேனியில் கருவுற்ற குரங்கிற்கு அறுவை சிகிச்சை

X
சின்னமனுார் பகுதியில் கருவுற்ற குரங்கு மயங்கிய நிலையில் இருந்தது. இதனை வனக்காப்பாளர்கள் மீட்டு, தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு குரங்கின் வயிற்றில் சிசு உயிரிழந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து, தாய் குரங்கிற்கு அறுவை சிகிச்சை செய்து கருப்பையில் இறந்த சிசுவை அகற்றினர். குரங்கு ஓரிரு நாட்களில் குணமடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Next Story

