மாநில நெடுசாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழந்தது

மாநில நெடுசாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழந்தது
திருவள்ளூர் மாவட்டம் வியாசபுரம் மாநில நெடுஞ்சாலையில் மூன்று வயது மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது மான் சடலத்தை எடுத்துச் செல்ல வராத வனத்துறையினர் நான்கு மணி நேரம் சாலையில் நாய்கள் தொல்லையிலிருந்து மான் சடலத்தை காத்திருக்கும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு எட்டிக் கூட பார்க்காத போலீசார் பொதுமக்கள் வேதனையுடன் குற்றச்சாட்டு.... திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் அருகிலுள்ள வியாசபுரம் கிராமத்தின் வெளியில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அருகில் உள்ள காப்பு காட்டில் தண்ணீர் தேடி வெளியில் வந்த மூன்று வயது மான் ஒன்று சாலையை கடக்கும் பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் பலியானது இந்த மான் பிரேதம் சாலை நடுவில் இருந்ததை வாகன ஓட்டிகள் மேலும் வாகனங்கள் மோதாமல் இருக்க மான் சடலத்தை அருகில் சாலை ஓரம் எடுத்து வைத்தனர் சம்பவ இடத்திற்கு சம்பவம் நடந்தது குறித்து போலீசாருக்கும் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்த பின்பும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக மான் சடலத்தை எடுக்க வனத்துறை அதிகாரிகள் வரவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் குற்றச்சாட்டு மான் சடலத்தை கவ்வி செல்ல தெரு நாய்கள் சுற்றி வருகிறது தெருநாய்கள் தொல்லையிலிருந்து மான் சடலத்தை காத்து வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதுபோல் சம்பவங்களில் விரைந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் செயல்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இந்த பகுதிகளில் மான் இவைகளுக்கு தேவையான தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் அவசர உதவி வனத்துறை செல்போன் தொடர்பு எண்களையும் காட்சிப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த பொதுமக்கள்....
Next Story