வாங்கல் -மது போதை தந்த பரிசு-இளைஞர் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு.

வாங்கல் -மது போதை தந்த பரிசு-இளைஞர் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு.
வாங்கல் -மது போதை தந்த பரிசு-இளைஞர் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், வாங்கல் ,வ உ சி தெருவை சேர்ந்தவர் தேவராஜ் மகன் சூர்யா வயது 25. இவர் மது போதைக்கு அடிமையானதால் கடந்த 3- வருடங்களாக மூச்சுத் திணறல் நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் ஜூன் 2-ம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் , உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து , பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த சூர்யாவின் சகோதரர் நந்திராஜ் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த சூர்யாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து , இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story