தேனியில் சேதம் அடைந்து காணப்படும் அங்கன்வாடி கட்டிடம்

X
தேனி மாவட்டத்தில் 1060க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது. இதில், சில அங்கன்வாடி கட்டிடங்களின் கூரை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அதனை மாவட்ட நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுகிறது.
Next Story

