பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா

X
Komarapalayam King 24x7 |4 Jun 2025 8:10 PM ISTகுமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா, மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர், வழக்கறிஞர் தங்கவேல் தலைமையில் நடந்தது. ஆனங்கூர் பிரிவு சாலையில் நடந்த இந்த விழாவில், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பா.ஜ.க.கட்சிக்காக, அண்ணாமலை செய்த பணிகள் குறித்து, வழக்கறிஞர் தங்கவேல் பேசினார். இவர் பேசியதாவது: அண்ணாமலை தமிழகத்தில் மாநில தலைவராக பணியாற்றி, அனைத்து கட்சியினரை திரும்பி பார்க்க வைத்தார். இவரது பணிகளை கவனித்த இளைஞர்கள் பெருமளவில், புதிய உறுப்பினர்களாக இணைந்தனர். இவரது நடைபயணம் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. யார் என்ன கேள்வி கேட்டாலும், தாமதம் இல்லாமல், ஆதாரத்துடன் எடுத்துரைக்கும் சாதனை, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவரது தலைமையின் கீழ், தமிழக பா.ஜ.க. நிமிர்ந்து நின்றது என்றால் அது மிகையில்லை. இவ்வாறு அவர் பேசினார். பொதுக்குழு உறுப்பினர் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
