குமரி : பழுதாகி நடுவழியில் நின்ற சரக்கு ரயில்

X
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் குமரி மாவட்ட எல்லையான பாறசாலை பகுதியில் திடீரென பழுதாயின்றது. இரு பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு கப்ளிங் துண்டிக்கப்பட்டு ரயில் நடுவழியில் நின்றது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் பாதை சரி செய்தனர். சரக்கு ரயில் நடுவழியில் நின்றதால் நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி - திருவனந்தபுரம் இன்டெர்சிட்டி ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதுபோல் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த பாசஞ்சர் ரயிலும் நிறுத்தப்பட்டது. பழுதாகி நின்ற சரக்கு ரயிலை ஊழியர்கள் சரி செய்தபின் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
Next Story

