முதியவர் மாயம் போலீசில் புகார்

X
Komarapalayam King 24x7 |4 Jun 2025 8:16 PM ISTகுமாரபாளையத்தில் முதியவர் மாயமானதால் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் கிழக்கு காலனியில் வசித்து வந்தவர் குமாரசாமி, 90. நகை வேலை செய்யும் ஆசாரி. இவர் நேற்றுமுன்தினம் மாலை 05:00 மணியளவில் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறிச் சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது மகள் சரஸ்வதி குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
