முன்னாள் சென்ட் டூ வீலர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய டூவீலர் ஓட்டுநர் கைது

முன்னாள் சென்ட் டூ வீலர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய டூவீலர் ஓட்டுநர் கைது
X
குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் விபத்துக்கு காரணமானவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் அருகே கலியனூர் பகுதியை சேர்ந்தவர் பச்சியண்ணன், 48. கட்டிட கூலி. இவர் தனது டி.வி.எஸ்.எக்ஸல் வாகனத்தில், நேற்றுமுன்தினம் மாலை 02:30 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, அங்கப்பா பில்டிங் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே வழியில் இவருக்கு பின்னால் வந்த ஹீரோ ஸ்ப்லேண்டர் டூவீலர் ஓட்டுனர் இவர் மீது மோத, நிலைதடுமாறி கீழே விழுந்த, பச்சியண்ணன், பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனர், ஈரோட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜேஷ்குமார், 39, என்பவரை கைது செய்தனர்.
Next Story