படகு கட்டண உயர்வு: எம்எல்ஏ கண்டனம்

படகு கட்டண உயர்வு:   எம்எல்ஏ கண்டனம்
X
கன்னியாகுமரியில்
. கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் என். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “சமீப காலமாக கன்னியாகுமரிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்கள் படகில் செல்ல மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் அடிக்கடி ஏற்படுகிறது. முதியவர்களும் சிறுவர்களும் நீண்ட நேரம் காத்திருந்து மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் அரசால் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படாத நிலையில், கட்டணத்தை மட்டும் உயர்த்தியிருப்பது வருத்தமளிக்கிறது. அதற்குமுன் கடந்த ஜூன் 3ஆம் தேதி, கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, நூற்றுக்கணக்கான திமுகவினர் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இரு படகுகளில் திருவள்ளுவர் சிலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. கட்சியினருக்கு இலவசமாக படகு சேவை வழங்கப்படும் நிலையில், ஏழை, நடுத்தர சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கட்டணத்தை உயர்த்துவது முற்றிலும் தவறானது. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்து அவதியடைவதை தவிர்க்கும் வகையில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Next Story