ஒத்தக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின் வினியோகம் நிறுத்தம்.
ஒத்தக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின் வினியோகம் நிறுத்தம். கரூர் அடுத்த வாங்கல் செல்லும் பாதையில் உள்ள ஒத்தக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒத்தையூர், வேடிச்சி பாளையம் , தெற்கு இடையர்பாளையம் , எழுத்துப் பாறை , கல்லுப்பாளையம் , சோமூர் , திருமுக் கூடலூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனவும் , இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திட்டமிட்டு தங்களது பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story




