கோவை: பிரபல கல்வியாளர் கருணாம்பிகை காலமானார் !
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க வைச் சேர்ந்தவருமான டாக்டர் சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை காய்ச்சல் காரணமாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இச்சம்பவம் கட்சி வட்டாரத்திலும், மொடக்குறிச்சி தொகுதியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி 1968 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படித்து மருத்துவரானார். மேலும், 1972 இல் அதே பல்கலைக் கழகத்தில் குழந்தைகள் மருத்துவத்தில் பட்டயப்படிப்பை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த கருணாம்பிகை, டாக்டர் சரஸ்வதியின் இரு குழந்தைகளில் ஒருவர். இவருக்கு சிவகுமார் என்ற சகோதரர் உள்ளார். கரணாம்பிகையின் மறைவுக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கரணாம்பிகையின் மறைவு பா.ஜ.க வட்டத்திலும் மொடக்குறிச்சி பகுதியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story



