கோவை: எரிந்த நிலையில் நாயின் சடலம் !

X
கோவை,சூலூர் அருகே நல்லூர் பாளையத்திலிருந்து வரப்பாளையம் செல்லும் சாலையில் நேற்று ஒரு நாயின் எரிந்த சடலம் கிடைத்ததைக் கண்ட பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். சாலையின் நடுவே பாதியாக எரிந்த நிலையில் கிடந்த நாயின் சடலத்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், அங்கு வீசும் கடும் துர்நாற்றம் காரணமாக சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், நோய் தொற்றுகள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Next Story

