தாண்டிக்குடி அருகே டெம்போ ட்ராவலர் கவிழ்ந்து விபத்து

X
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மதுரையில் இருந்து டெம்போ ட்ராவலர் வாகனம் மூலம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் இரவு சுமார் 7.30 மணி அளவில் டெம்போ ட்ராவலர் கொடைக்கானல், தாண்டிக்குடி, பூலத்தூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி சம்பவம் குறித்து தாண்டிக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

