மின்சாரம் தாக்கி நர்ஸ் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி நர்ஸ் உயிரிழப்பு
X
திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி நர்ஸ் உயிரிழப்பு
திண்டுக்கல், குட்டியபட்டி பிரிவு பேகம்சாகிபா நகர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மனைவி சுஜாதா(45) இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் வீட்டின் மாடியில் துணி காய வைக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளார் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story