அரக்கோணம்: ரயில் முன் பாய்ந்து கல்லூரி பேராசிரியர் தற்கொலை

X
அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமம் பிள்ளையார் பேராசிரியர் கோவில் தெருவை சேர்ந்தவர் தினகரன் தினகரன் (வயது 42). திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இந்துமதி. இவர் குருவராஜபேட்டையில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் மகள், 5 வயதில் மகன் உள்ளனர்.பேராசிரியர் தினகரனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது. இதனால் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் ரூ.25 லட்சம் வரை பணத்தை இழந்ததாக தெரிகிறது. இந்த கடனை வீட்டுக் கடன் மற்றும் நகைக்கடன் வாங்கி அடைத்துள்ளார். அது மட்டுமின்றி தெரிந்தவர்களிடமும் கடனாக பணத்தை வாங்கி மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். அந்த பணமும் போதாத நிலையில் கடன் செயலிகளில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில் கல்லூரி நிர்வாகம் கடன் பிரச்சினையை தீர்த்து விட்டு வருமாறு கூறி அவரை தற்காலிகமாக பணியிலிருந்து நிறுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தது மட்டுமின்றி, கல்லூரி நிர்வாகமும் அவரை பணியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தியதால் விரக்தியடைந்த தினகரன் அரக்கோணம் அருகே சித்தேரி பகுதியில் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் இதுகுறித்து சித்தேரி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசார் தினகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

