வாலாஜாவில் வெறி நாய்களுக்கு தடுப்பூசி!

வாலாஜாவில் வெறி நாய்களுக்கு தடுப்பூசி!
X
வெறி நாய்களுக்கு தடுப்பூசி!
நாய்களுக்கு வெறிநோய் ஏற்படுவதை தடுக்க தடுப்பூசி போடுவதற்கான பயிற்சி முகாம் வாலாஜா நகராட்சியில் நடந்தது. மாவட்ட கால்நடை துறை துணை இயக்குனர் டாக்டர் திருநாவுக்கரசு தலைமையில் நடந்த முகாமில் வாலாஜா நகராட்சி ஆணையாளர் இளையராணி முன்னிலை வகித்தார். இதில் வாலாஜா நகராட்சியை சேர்ந்த 4 தூய்மை பணியாளர் கள் மற்றும் பனப்பாக்கம் தக்கோலம், நெமிலி ஆகிய பேரூராட்சி அமைப்புகளைச் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு சென்னை பிராணிகள் நலவாரிய மருத்துவ கால்நடை மருத்துவர் டாக்டர் ஜெயகிருஷ்ணன் பயிற்சி அளித்தார். நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த 25 நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.இதனை தொடர்ந்து வாலாஜாவில் உள்ள 2, 3 ஆகிய பகுதிகளில் 60 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. அந்த நாய்களுக்கு கால்நடை டாக்டர்கள் சுகன்யா, ஓம் பிரகாசம் மற்றும் குழுவினர் வெறி நோய் தடுப்பூசி செலுத்தினர்.
Next Story