பாஜகவின் ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு

X
மதுரையில் ஜூன் 1ஆம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஜூன் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்று பேச உள்ளார். இதில் அமித்ஷா தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள பாஜக அமைப்பு ரீதியாக 13 பிரிவுகளின் நிர்வாகிகள் மற்றும் 6 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற உள்ளனர். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அமித்ஷா ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட உள்ளதால் அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்த வாய்ப்புக்கள் உள்ளது. மேலும், பாஜக வட்டாரங்களில் அமித் ஷாவின் வருகை அரசியல் முக்கியத்துவம் பெறும் என தெரிகிறது.
Next Story

