ரிங் ரோடு வாகன விபத்தில் வாலிபர் பலி.

X
மதுரை அவனியாபுரம் தனபாலன் காவிரி 6வது தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சரவண கண்ணன் ( 25) என்பவர் தனது நண்பர் சோனைமுத்துவுடன் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் மாட்டுத்தாவணி ரிங் ரோடு பரப்புபட்டி அருகே கடந்த 23ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சென்று இருசக்கர வாகனத்தில் கொண்டிருந்த பொழுது நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சென்ட்மீடியனில் மோதி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கே இருந்தவர்கள் மீட்டு வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சரவணா கண்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து பெருங்குடி காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

