தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களை ஆட்டோவில் ஏற்றிச்செல்ல அனுமதி மறுத்த போலீசார்

அனுமதி
தேனி அருகே உள்ள பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம் பொதுமக்கள் சென்று வந்தனர் இந்த நிலையில் இன்று இரவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோவை நிறுத்தி பொதுமக்களை ஏற்ற போலீசார் அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு செல்ல முடியாமல் தவித்தனர் இதனால் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் குவிந்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது சம்பவ இடத்திற்கு வந்த தேனி உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இரண்டு சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களிடையே பொதுமக்களை சவாரி ஏற்றுவதற்கு பிரச்சினை ஏற்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் இதனால் இப்பகுதியில் ஆட்டோ நிற்பதற்கு போலீசார் தடை விதித்தனர் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டனர் ஆனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் ஓட்டுனர்கள் கோரிக்கையை மறுத்தனர் இதனை அடுத்து நாளை தேனி காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் இடம் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது குடும்பத்தினருடன் புகார் மனு கொடுக்க உள்ளனர்
Next Story