முனியப்பனூரில் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.

முனியப்பனூரில் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.
முனியப்பனூரில் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம் , மண்மங்கலம் தாலுகா, பெரிய காளிபாளையம் வடக்கு தோட்டம் அருகே உள்ள முனியப்பனூரில் புனரமைக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று அதிகாலை மங்கள இசையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் , விக்னேஸ்வர பூஜை , புண்ணியாகம் , யாக ஹோமம் , நாடி சந்தானம் , சன்னபதி ஹோமம் , காயத்ரி ஹோமம் , மூர்த்தி ஹோமம் உள்ளிட்ட ஹேமங்கள் நடைபெற்று தீபாதாரணை நடைபெற்றது . அதன் பிறகு யாத்திரா தானம் , கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியார்கள் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை விமர்சையாக நடத்தினர். இதனை தொடர்ந்து மூலவருக்கு தீபதாரணை நடைபெற்று ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.
Next Story