ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தமிழக முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம் குறித்து தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்த உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில் இன்று கரூர் ஆண்டாள் கோவில் மேற்கு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி,ஊராட்சி மன்ற செயலாளர் பாலுசாமி , ஊர் பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு வீடுகள் மறு கட்டுமான திட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
Next Story







