இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்

X
பள்ளப்பட்டி செல்லும் வழியில் பள்ளப்பட்டியின் நுழைவு வாயில் பகுதியாக அமைந்துள்ளது நங்காஞ்சி ஆற்று பாலம். இவ்வழியாக திண்டுக்கல், பழனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயணம் செய்து வருகின்றனா். மேலும் பள்ளப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நங்காஞ்சி ஆற்று பாலத்தை கடந்து தான் அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல முடியும். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நங்கஞ்சி ஆற்றுப் பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் பாலம் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பெண்கள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மின்விளக்குகள் இல்லாததால் விபத்தை ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Next Story

