கோவை: மாடு திருட வந்த வட மாநில இளைஞர் கைது!

கோவை: மாடு திருட வந்த வட மாநில இளைஞர் கைது!
X
சூலூர் அருகே உள்ள செலக்கரிச்சல் கிராமத்தில் இன்று அதிகாலையில் மாடு திருடும் நோக்குடன் கயிறுடன் சுற்றித்திரிந்த ஒரு வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சூலூர் அருகே உள்ள செலக்கரிச்சல் கிராமத்தில் இன்று அதிகாலையில் மாடு திருடும் நோக்குடன் கயிறுடன் சுற்றித்திரிந்த ஒரு வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செலக்கரிச்சல் கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் தோட்டப் பகுதிகளில் இன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் கையில் கயிறுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி வந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த நபரைச் சூழ்ந்து பிடித்துள்ளனர். விசாரணையில், பிடிபட்டவர் ஒரு வட மாநில இளைஞர் என்பதும், அப்பகுதிகளில் மாடு மற்றும் ஆடுகளைத் திருடிச் செல்வதற்காகவே கயிறுடன் சுற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அந்த இளைஞரை சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கடந்த சில நாட்களாக சுல்தான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடு, மாடு, கோழிகள் போன்ற கால்நடைகள் திருடு போவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில், இன்று அதிகாலையில் மாடு திருடும் நோக்குடன் வந்த வட மாநில இளைஞர் கையும் களவுமாகப் பிடிபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியையும், அதே சமயம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story