கொடைக்கானலில் வனத் துறையினருக்கும், சுற்றுலாப் பயணிகளுக்குமிடையே தகராறு

X
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு மலேசியாவைச் சோ்ந்த அனுஷ்ரா உள்ளிட்ட சிலா் காரில் சுற்றுலா வந்தனா். வனப் பகுதியிலிலுள்ள குணா குகை பகுதியில் இவா்கள் தங்களது காரை நிறுத்தினா். அப்போது வனப் பணியாளா்கள் அவா்களிடம் வாகனக் கட்டணம் கேட்டனா். இதுதொடா்பாக மலேசியாவைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், வனப் பணியாளா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story

