ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்.
ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றதில் ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பாரி பி.பாபு தலைமை தாங்கினார். அனைவரையும் நகர செயலாளர் அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டு அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலதிட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். உடன் மாவட்டஇணைசெயலாளர் வனிதாசதீஷ், ஒன்றியஅவைத்தலைவர் சேவூர் ஜெ.சம்பத், ஐ. டி.விங் வேலப்பாடி சரவணன் பேரவை ஒ்ன்றியசெயலாளர் புங்கம்பாடி சுரேஷ், நகரபேரவை செயலாளர் பாரதிராஜா, ஆரணி நகரமன்ற உறுப்பினர்கள் குமரன் சுதாகுமார், நடராஜன், வி.கே.வெங்கடேசன், விநாயகம் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.
Next Story





