கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X
திண்டுக்கல் அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் நல்லாம்பட்டி அருகே SKS. நகரை சேர்ந்த தீத்தான்(39) இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீத்தானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story