குமரி : தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் உண்ணாவிரதம்

குமரி : தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் உண்ணாவிரதம்
X
தனித் தொகுதி அறிவிக்க கேட்டு
கன்னியாகுமரி தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்க கோரி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கியுள்ளது 68 ஆண்டு காலம் தலித் மக்கள் கன்னியாகுமரி தொகுதியை தனி தொகுதியாக அறிவிக்கக் கோரி போராட்டங்கள் தொடர்ந்த போதும் இதுவரையில் தலித் மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளும், தேர்தல் ஆணையமும் புறக்கணித்து வருவதாகவும் 68 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வு கிடைக்க கோரியும், இந்திய தேர்தல் ஆணையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியில் ஒரு தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்கக்கோரியும் சிறப்பு சட்டசபையை கூட்டி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் இன்று காலை முதல் தீர்வு கிடைக்கும் வரை நாகர்கோவில் ஸ்டேடியம் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை முன்பு அதன் தலைவர் வை.தினகரன் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வை.தினகரன் அறிவித்துள்ளார்.
Next Story